2024 மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி.. மாயாவதி

 
நானும் மாற போறேன்.. என் கூடவும் நிறைய பேர் மதம் மாறுவாங்க! மாயாவதி பரபரப்பு தகவல்

எதிர்வரும் மக்களவை தேர்தல் மற்றும் 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அந்த கட்சியின் தலைவி மாயாவதி தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று நோக்கத்தில் காங்கிரஸ், ஆம்  ஆத்மி, சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளன. அதேசமயம் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணியிலும் இணையவில்லை, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலும் இணையவில்லை. இதனால் மாயாவதி எந்த கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. 

வெங்கையா நாயுடு சொன்னதை மோடி அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும்.. பகுஜன் சமாஜ் கட்சி வலியுறுத்தல்..

இந்நிலையில், எதிர்வரும் மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்று மாயாவதி அறிவித்துள்ளார். மாயாவதி எக்ஸில் (முன்பு டிவிட்டரில்) தொடர்ச்சியான பதிவுகளில், பகுஜன் சமாஜ் கட்சி 2007ம் ஆண்டை போலவே, எதிர்வரும் மக்களவை தேர்தல் மற்றும் நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் நமது எதிரிகளின் சூழ்ச்சியை காட்டிலும் பரஸ்பர சகோதரத்துவத்தின் அடிப்படையில் கோடிக்கணக்கான புறக்கணிக்கப்பட்ட/சிதறிய சமூக உறுப்பினர்களை ஒன்றிணைத்து தனித்து போட்டியிடும். ஊடகங்கள் தவறான கருத்துக்களை பரப்பக் கூடாது.

பா.ஜ.க.

அனைவரும் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைக்க ஆர்வமாக உள்ளனர், ஆனால் நான் அவ்வாறு செய்யாதபோது, பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. நீங்கள் அவர்களுடன் கூட்டணி வைத்தால், நீங்கள் மதச்சார்ப்பற்றவர், இல்லையென்றால் நீங்கள் பா.ஜ.க.வுடன் இருக்கிறீர்கள். இது மிகவும் அநியாயமானது மற்றும் திராட்சை புளிப்பு என்று கூறுவதை போன்றது என்று பதிவு செய்துள்ளார்.