குஜராத்தில் மாலில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33 ஆக உயர்வு

 
fire

குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

Massive Fire Breaks Out At TRP Game Zone In Rajkot

குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். வெல்டிங் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விளையாட்டு மையத்தில் 12 வயதுக்குட்பட்ட 9 சிறார்கள் உட்பட 33 பேர் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர். விளையாட்டு மையத்தின் உரிமையாளரை கைது செய்து தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


ராஜ்கோட் மேற்கு எம்எல்ஏ தர்ஷிதா ஷா உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “ராஜ்கோட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் மிகவும் துயரமடைந்துள்ளேன். காயமடைந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய உள்ளூர் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.