நிலநடுக்கத்தால் உருகுலைந்த நேபாளத்திற்கு ஆதரவளித்த பிரதமர் மோடி!

 
modi

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் நேற்று நள்ளிரவு 6.4 ரிக்டர்  அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.  இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் .

tn

நேபாளத்தில் நிகழ்ந்த நிலநடுக்கம் ஆனது டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் எதிரொலித்து  நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 128ஆக உயர்ந்தது.

earth

இந்நிலையில் நேபாளம் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகளை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். இந்தநேரத்தில் நேபாளத்துடன் இந்தியா துணை நிற்கிறது. அந்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.