மோடி - மெலோனி வீடியோ எதிரொலி- 'மெலோடி' சாக்லேட் விற்பனை கிடுகிடு உயர்வு
பிரதமர் மோடி இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு மெலோடி (Melody) சாக்லேட்டைப் பரிசாக வழங்கிய வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே, இந்தியாவில் அதன் விற்பனை மிகத் தீவிரமாக அதிகரித்துள்ளது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி விரைவு விநியோக (Quick-Commerce) செயலிகளான பிளின்கிட் (Blinkit), ஜெப்டோ (Zepto), மற்றும் இன்ஸ்டாமார்ட் (Instamart) ஆகியவற்றில் மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு மெலோடி சாக்லேட்டுகளை ஆர்டர் செய்யத் தொடங்கினர். இதன் காரணமாக, நாட்டின் பல முக்கிய நகரங்களில் இத்தளங்களில் மெலோடி சாக்லேட் முற்றிலும் விற்றுத் தீர்ந்து, 'Out of Stock' என்று காட்டும் அளவிற்கு அதன் தேவை திடீரென அதிகரித்துள்ளது. மெலோடி சாக்லேட்டைத் தயாரிக்கும் 'பார்லே பிராடக்ட்ஸ்' (Parle Products) நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் சி.எம்.ஓ (CMO) ஆன மயங்க் ஷா, இந்தத் திடீர் விளம்பரம் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்:
Thank you for the gift pic.twitter.com/7ePxbJwPbA
— Giorgia Meloni (@GiorgiaMeloni) May 20, 2026
"கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து விளம்பரம் செய்தாலும் கிடைக்காத உலகளாவிய அங்கீகாரத்தை, இரு நாட்டுத் தலைவர்களின் இந்த எளிய நட்புப் பரிமாற்றம் எங்கள் பிராண்டிற்குப் பெற்றுத் தந்துள்ளது. இந்தியத் தயாரிப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல இது ஒரு மிகச்சிறந்த வழி." மேலும், வரும் நாட்களில் இதன் விற்பனை மற்றும் தேவை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்று நிறுவனம் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. 80-களில் அறிமுகப்படுத்தப்பட்டு, இன்று வெறும் 1 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த எளிய சாக்லேட், ஒரே நாளில் சர்வதேச அளவில் டிரெண்டாகி இந்திய அளவில் பற்றாக்குறை ஏற்படும் அளவிற்கு ஒரு 'ஷாப்பிங் அலையை' உருவாக்கியிருப்பது சமூக வலைத்தளங்களின்Soft Power-க்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.

