மோடி ஜி மிகவும் திமிர்பிடித்தவராகி விட்டார், ஜனநாயகத்தைப் பின்பற்றுவதில்லை... மணிஷ் சிசோடியா குற்றச்சாட்டு

 
பிரதமர் மோடி

மோடி ஜி மிகவும் திமிர்பிடித்தவராகி விட்டார், அவர் ஜனநாயகத்தைப் பின்பற்றுவதில்லை என்று டெல்லியின் முன்னாள் முதல்வர் மணிஷ் சிசோடியா குற்றம் சாட்டினார்.

டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி 26ம் தேதி கைது செய்தது. மேலும், டெல்லி மதுபான கொள்கையில் நடந்த பணமோசடி தொடர்பாக மணிஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை தனி வழக்குப் பதிவு செய்தது. கைது செய்யப்பட்ட மணிஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மணிஷ் சிசோடியா நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

மணிஷ் சிசோடியா

அப்போது வழக்கு விசாரணைக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து பணமோசடி வழக்கில் மணிஷ் சிசோடியாவுக்கு வரும் ஜூன் 1ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீதிமன்றம் நீட்டித்தது. இதனையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக நீதிமன்ற வளாகத்தில்  செய்தியாளர்களிடம் மணிஷ் சிசோடியா பேசினார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

அப்போது,  யூனியின் பிரதேச உயரதிகாரிகள் பணி நியமனம், பணியிட மாற்றத்துக்கு புதிதாக ஆணையம் அமைக்க மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது குறித்து மணிஷ் சிசோடியா கூறியதாவது: மோடி ஜி மிகவும் திமிர்பிடித்தவராகி விட்டார், அவர் ஜனநாயகத்தைப் பின்பற்றுவதில்லை. கெஜ்ரிவாலின் பணியை பார்த்து, அவர் ஆணவமாகி விட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதன் பிறகு மணிஷ் சிசோடியாவை அதிகாரிகள் அழைத்து சென்றனர்.