மணிஷ் சிசோடியாவை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

 
manish sisodia

டெல்லி முன்னாள் முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.  இந்த அரசு மதுபான கொள்கையை தளர்த்தி தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கியதோடு,  சலுகைகளையும் அரசு வழங்கியதை குற்றச்சாட்டு எழுந்தது.   இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக  சிபிஐ குற்றம் சாட்டியுள்ள நிலையில்,  இதில்  அம்மாநில துணை முதலமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியாவிற்கு  தொடர்பு இருக்கலாம் எனவும்  சிபிஐ சந்தேகிக்கித்தது.   இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க  சிசோடியாவுக்கு  சிபிஐ சம்மன் அனுப்பியதை தொடர்ந்து,  டெல்லி சிபிஐ அலுவலகம் முன்பு அவர் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார். விசாரணைக்கு பின் மணிஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 26ம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிசோடியாவை சிபிஐ காவலில் எடுத்து விசாரித்தது. சிபிஐ காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து மார்ச் 20 வரை மணிஷ் சிசோடியாவை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 

Manish delhi

இதனிடையே சிபிஐயை தொடர்ந்து, அமலாக்கத்துறை மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. அவரை ஏழு நாள்களுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்தனர். இந்த நிலையில், அமலாக்கத்துறை காவல் நிறைவடைந்த நிலையில், மேலும் அவகாசம் கோரி அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்நிலையில்,  டெல்லி முன்னாள் முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.