சிவனை பார்க்க கடும் தவம் - 12 ஆண்டுகளாக நின்றுகொண்டே இருக்கும் பக்தர்!

 
s

ஹரியானை சேர்ந்த சிவன் பக்தர் ஒருவர் 12 ஆண்டுகளாக நின்றுகொண்டே  தவம் இருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது. 

சிவபெருமானுக்கு நேர்த்திக்கடனாக 12 ஆண்டுகள் ஒரே இடத்தில் நிற்கும் மனிதர்; இந்தத் தவத்தின் விவரங்கள் இணையவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன | போர்டு பாண்டா

முனிவர்கள் இறைவனை காண கடும் தவத்தை இருந்திருக்கிறார்கள் என புராணக் கதைகளில் கேட்டிருப்போம். அந்தவகையில் ஹரியானாவை சேர்ந்த துலால் கிரி ஜி மகாராஜ் என்பவர், தனது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, ஆன்மீக வழியில் பயணிக்க தொடங்கினார்.  கடும் துறவறத்தின் மூலம் இந்து தெய்வமான சிவனைக் காண முடியும் என்ற நம்பிக்கையில், 12 ஆண்டுகளாக  நின்று வருகிறார் துலால் கிரி ஜி மகாராஜ். இவரின்  புகைப்படங்களும் காணொளிகளும் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. புகைப்படத்தில் அவரது கால்கள் வீங்கி கருத்திருக்கிறது. 

ஓய்வெடுக்கும்போதோ அல்லது உறங்கும்போதோ கூட, துலால் கிரி ஜி மகாராஜ் தன் உடலைத் தாங்கிக்கொண்டு கீழே விழாமல் இருப்பதற்காக, பெல்ட்கள் அல்லது கயிறுகள் போன்ற சாதனங்களை பிடித்தபடி நின்று கொள்கிறாராம். பல ஆண்டுகளாக நின்றுகொண்டிருந்ததால் அவரது கால்களில் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, வீக்கமும் நிறமாற்றமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.