நகை வாங்கி தருவதாக அழைத்து சென்று மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்

 
murder murder

ஆந்திராவில் மனைவியின் சுவட்டர் லேசை கொண்டு கழுத்தை நெரித்து கொன்று காவல் நிலையத்தில் சரணடைந்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள  சாந்தமகுளூர் மண்டலம் யெல்சூரைச் சேர்ந்த வெங்கடேஷ்வர்லுவும், பல்நாடு மாவட்டம் மச்சவரத்தைச் சேர்ந்த மகாலட்சுமியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருப்பினும், சில காலமாக வெங்கடேஷ்வர்லு மனைவி மீது சந்தேகத்தால் அடிக்கடி மகாலட்சுமியிடன் சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக மகாலட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்று  பிரிந்து வசித்து வருகிறார். 

இந்தநிலையில்  ஞாயிற்றுக்கிழமை மாலை  மச்சவரம் சென்ற வெங்கடேஷ்வர்லு மனைவிக்கு  தங்க நகை வாங்கி தருவதாக கூறி  மனைவியை பைக்கில்  கிராமத்தின் புறநகர்ப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் அணிந்திருந்த சுவட்டரில் இருந்த லேசை கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர், மனைவியின் உடலை பைக்கில் மாச்சவரம் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று போலீசார் முன் சரணடைந்தார்.  போலீசார் உடனடியாக மகாலட்சுமியை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதனையடுத்து போலீசார், வழக்குப் பதிவு செய்யப்பட்டு வெங்கடேஸ்வரலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.