டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ - ஒருவர் பலி

 
Man Dies Of Suffocation After Fire At Income Tax Office In Delhi

டில்லி ஐடிஒ பகுதியில் அமைந்துள்ள வருமான வரித்துறை அலுவலகத்தின் 4வது மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Image

டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. டெல்லியில் உள்ள வருமான வரித்துறையின் அலுவலகத்தில் பற்றிய தீயை 21 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் வருமான வரித்துறை கட்டடத்தில் இருந்த ஊழியர்களை தீயணைப்பு வீரர்கள் ஜன்னல் வழியாக வெளியேற்றினர்.

டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்த நபர் மயக்கமடைந்த நிலையில், அவர்மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏசியில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.