42 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மம்தா பானர்ஜி!

 
mamata

மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை  திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது

மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவை தேர்தலை நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 3வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்க காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன.  

இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை  திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. மேற்குவங்க மாநிலத்தின் 42 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி அறிவித்தார். 42 வேட்பாளர்கள் பட்டியலை மம்தா பானர்ஜி வெளியிட்டு ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார். பெர்ஹாம்பூர் தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் போட்டியிடுகிறார்.  காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை எதிர்த்து போட்டியிடுகிறார் யூசுப் பதான். தகுதி நீக்கம் செய்யப்பட்ட மஹுவா மொய்த்ராவுக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.