கருத்துக்கணிப்புகளை தவிடு பொடியாக்கி தட்டித்தூக்கிய மம்தா

 
நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலவுகிறது – மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி காட்டம்

மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி அனைத்து கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கி முன்னிலையில் இருந்து வருகிறார்.

மம்தா பானர்ஜி


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது.  நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில்  கடந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருந்த நிலையில் இந்த முறை கூட்டணி அல்லாமல் ஆட்சி அமைக்க முடியாத நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. இதுவரை வெளியான முடிவுகளின்படி பாஜக மற்றும் 235 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 230 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 

இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி அனைத்து கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கி முன்னிலையில் இருந்து வருகிறார். மொத்தம் 42 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் 31 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் இருக்கின்றனர். மேற்குவங்க மாநிலம் டைமண்ட் ஹார்பர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அபிஷேக் பானர்ஜி மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். நான்கு லட்சத்து 25 ஆயிரம் வாக்குகளை அவர் பெற்றுள்ள நிலையில் வாக்கு வித்தியாசம் 3 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. பாஜக 10 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலையில் இருக்கிறார்கள். இதனையடுத்து மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி இல்லத்தில்திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அக்கட்சி பெற்றுள்ள நிலையில் இந்தியா கூட்டணியும் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் மம்தா பானர்ஜி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர்.