பாஜகவை வீழ்த்த மம்தா பானர்ஜி கூறிய யோசனை.. அகிலேஷ் ஆதரவு..

 
பாஜகவை வீழ்த்த மம்தா பானர்ஜி கூறிய யோசனை.. அகிலேஷ் ஆதரவு..

 பாஜகவை வீழ்த்த மம்தா பானர்ஜி கூறிய யோசனைக்கு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் ஆதரவு தெரிவித்துள்ளார்.  

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த  2 நாடாளுமன்ற தேர்தல்களிலும் வெற்றிபெற்று 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக  ஆட்சி செய்து வருகிறது.  பாஜக ஆட்சிட்யை முடிவுக்குக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.  அந்தவகையில் எதிர்க்கட்சிகளை ஓர் அணியில் திரட்டும் முயற்சியில் நிதிஷ் குமார் , மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

mamata
 
இந்நிலையில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்கிற மம்தாவின் யோசனைக்கு , சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்  ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, மக்களவைத் தேர்தலில் ஒரு மாநிலத்தில் எந்தக் கட்சி வலுவாக உள்ளதோ அந்தக் கட்சியின் தலைமையை ஏற்று, மற்ற கட்சிகள் போட்டியிட முன்வர வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் கேட்டுக்கொண்டுள்ளார்.