வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் சிறப்பு எதுவும் இல்லை, புதிய என்ஜினுடன் புதுப்பிக்கப்பட்ட பழைய ரயில்... மம்தா குற்றச்சாட்டு

 
வந்தே பாரத் ரெயில்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் சிறப்பு எதுவும் இல்லை,  இது புதிய என்ஜினுடன் புதுப்பிக்கப்பட்ட பழைய ரயில் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். 

மேற்கு வங்கத்தில் ஹௌரா-நியூ ஜல்பைகுரி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த வாரம் பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தொடர்ந்து 2 தினங்கள் வந்தே பாரத் ரயில் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த 3ம் தேதியன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல் வீசியது தொடர்பாக பீகார் காவல் துறை 3 சிறார்களை கைது செய்தது.

நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலவுகிறது – மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி காட்டம்

இதனையடுத்து, மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கல் வீச்சு சம்பவம் நடந்ததாக பொய்யான செய்தியை ஒளிபரப்பிய ஊடகங்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு சம்பவம் நடந்தது பீகாரில், மேற்கு வங்கத்தில் அல்ல. 

பா.ஜ.க.

மேற்கு வங்கத்தில் இந்த சம்பவம் நடந்ததாக பொய்யான செய்திகளை ஒளிபரப்பி நமது மாநிலத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திய ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். பீகார் மக்கள் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை விரும்புவதால் கோபமாக இருக்கலாம். அங்கு பா.ஜ.க. ஆட்சியில் இல்லை என்பதற்காக, அவர்கள் அங்கு அனுமதிக்கக் கூடாது என்று அர்த்தம் இல்லை. வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் சிறப்பு எதுவும் இல்லை, இது புதிய என்ஜினுடன் புதுப்பிக்கப்பட்ட பழைய ரயில். இவ்வாறு அவர் தெரிவித்தார்.