மோடி ராஜினாமா செய்ய வேண்டும்- மம்தா பானர்ஜி

 
மம்தா பானர்ஜி

மக்களிடையே நம்பகத்தன்மையை இழந்த பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக பதவி விலக வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Narendra Modi-Mamata Banerjee fight over democracy in Bengal: Here are the  hard facts - The Economic Times

செய்தியாளர்களை சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை, மக்களின் நம்பிக்கையை பிரதமர் மோடி இழந்துவிட்டார். எனவே அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். மோடிக்கு தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு கட்டாயம் தேவை. பிரதமர் மோடியால் இந்தியா கூட்டணியை உடைக்க முடியாது. மக்களவை தேர்தலில் கிடைத்த வெற்றி இந்திய மக்களுக்கான வெற்றி. 

மக்களின் தீர்ப்பை ஏற்று மோடியும், அமித் ஷாவும் ராஜினாமா செய்ய வேண்டும். INDIA கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வர உள்ளன. இவ்வளவு கொடுமைகள் செய்த பிறகும், இவ்வளவு பணம் செலவழித்தும், மோடி  மற்றும் அமித்ஷாவின் இந்த ஆணவம், இந்தியா வென்றது, மோடி தோற்றது. அயோத்தியில் கூட தோற்றுவிட்டார்கள். மக்களவை தேர்தலின் மூலம் பாஜகவின் முதுகெலும்பை  உடைத்து இருக்கிறோம்” என்றார்.