பாலியல் வன்கொடுமை - குற்றவாளிகளுக்கு 10 நாட்களில் மரண தண்டனை: மம்தா
பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு 10 நாட்களில் மரண தண்டனை விதிக்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி அறிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதுகலை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இதனை கண்டித்தும், பெண் மருத்துவர் மரணத்திற்கு நீதிக்கேட்டும் மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் இன்று பந்த் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் முதலமைச்சர் மம்தா பானார்ஜி, “பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும். 10 நாட்களில் மரண தண்டனை கிடைக்கும் வகையில் சட்டம் இயற்றப்படும். அடுத்த வாரம் கூடும் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே மாநில சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்.
போராடி வரும் மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். போராடி வரும் மருத்துவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது” என உறுதி அளித்துள்ளார்.