மால்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்க கூடாது - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

 
hc

மால்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்க கூடாது என்று கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

hc

தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் மால்கள் மற்றும் வணிக வளாகங்களில் வாகனங்கள் நிறுத்துவதிற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருசக்கர வாகனங்களுக்கு ஒரு கட்டண தொகை, 4 சக்கர வாகனங்களுக்கு வேறு கட்டண தொகை என ஒரு மணிநேரத்திற்கு என கணக்கிட்டு அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் சாமானியர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 

hc

இந்நிலையில் மால்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் வணிக வளாகங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க உரிமை இல்லை என்றும் கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வணிக வளாகங்களில் வாகன கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் , கட்டட விதிகளின்படி, போதிய வாகன நிறுத்துமிடம் இருந்தால் மட்டுமே கட்டடம் கட்டுவதற்கு அனுமதி உண்டு என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான இடம் இருந்தால் மட்டுமே அந்த கட்டடம் கட்ட வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.