இது மோடியின் தனிப்பட்ட தோல்வியல்ல; பாஜகவின் அப்பட்டமான தோல்வி: மல்லிகார்ஜூன கார்கே

 
mallika

மக்களவை தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இண்டியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம்  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “அரசியல் சாசனத்தின் மாண்புகளை காப்பாற்ற நினைக்கும் அத்தனை கட்சிகளையும் இந்தியா கூட்டணி திறந்த மனதுடன் வரவேற்கிறது. மக்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தீர்ப்பளித்து இருக்கிறார்கள். ஆனால் மக்களின் தீர்ப்பை எப்படியாவது மாற்ற வேண்டும் என மோடி துடிக்கிறார். நமது அரசியலமைப்பின் முகவுரையில் உள்ள சரத்துக்களுக்கு மதிப்பளிக்கும், அர்பணிப்புடன் உழைக்கும் அனைத்து கட்சிகளையும் I.N.D.I.A. கூட்டணி வரவேற்கும். மக்களவைத் தேர்தலில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளோம். 

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், நாட்டு மக்களுக்கு  கிடைத்த வெற்றி. இந்த தேர்தலில் கிடைத்த வெற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வெற்றி. இது மோடியின் தனிப்பட்ட முறையிலான தோல்வி மட்டுமல்ல, பாஜகவின் அப்பட்டமான தோல்வியும் கூட. இதை மறைக்க அவர்கள் பல்வேறு யுக்திகளை கையாள்வார்கள்” என்றார்.