மோடிக்கும் அதானிக்கும் என்ன சம்பந்தம்?, அதானி 2.5 ஆண்டுகளில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் சம்பாதித்தது எப்படி ?.. கார்கே

 
அதானி வழக்கு : உச்சநீதிமன்றம் இன்று விசாரணை..

பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் என்ன சம்பந்தம்?, அதானி 2.5 ஆண்டுகளில்  லட்சக்கணக்கான கோடி ரூபாய் சம்பாதித்தது எப்படி என்பதை அறிய விரும்புகிறோம் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே வலியுறுத்தினார்.

மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில், 17 கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள், அதானி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும்படி அமலாக்கத்துறையிடம் மனு கொடுக்க நாடாளுமன்றத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்றனர். ஆனால் அவர்கள் விஜய் சவுக் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது அங்கு மல்லிகார்ஜூன் கார்கே செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: அதானியின் ஊழல் தொடர்பாக ஒரு குறிப்பாணை சமர்ப்பிக்க அமலாக்கத்துறை இயக்குனரை நாங்கள் அனைவரும் சந்திக்க போகிறோம். ஆனால் அரசு எங்களை விஜய் சவுக் அருகே எங்கும் அனுமதிக்கவில்லை. அவர்கள் எங்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். 

மல்லிகார்ஜூன் கார்கே

பல லட்சம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. மற்றும் பிற வங்கிகள் அழிந்து விட்டன. அரசு சொத்துக்களை வாங்க ஒருவருக்கு அரசாங்கம் பணம் கொடுக்கிறது. முன்பு குறைவான சொத்துக்களை வைத்திருந்த ஒருவரை பிரதமர் மோடி ஊக்குவிக்கிறார் ஆனால்  இப்போது அந்த நபர் சொத்து மதிப்பை ரூ.13 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளார். அது நடந்தது எப்படி? யார் பொறுப்பு? பணம் கொடுப்பது யார்? விசாரணை நடத்த வேண்டும். 

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் என்ன சம்பந்தம்? நாங்கள் அனைவரும் 17-18 அரசியல் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் இங்கே இருக்கிறோம். அதானி 2.5 ஆண்டுகளில்  லட்சக்கணக்கான கோடி ரூபாய் சம்பாதித்தது எப்படி என்பதை அறிய விரும்புகிறோம். எங்களை இங்கே நிறுத்தி விட்டார்கள். நாங்கள் 200 பேர் ஆனால் இங்கு 2 ஆயிரம்  போலீசார் இங்கு உள்ளனர், எனவே அவர்கள் (மத்திய பா.ஜ.க. அரசு) எங்கள் குரலை அடக்க விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.