பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரி போல நாட்டை நடத்துகிறார்... மல்லிகார்ஜூன் கார்கே குற்றச்சாட்டு

 
மோடி

பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரி போல நாட்டை நடத்துகிறார் என்று மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே குற்றம் சாட்டினார்.

விஜய் சவுக்கில் காங்கிரஸின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: பா.ஜ.க. ஜனநாயகத்தை நசுக்கி அழித்து விட்டு ஜனநாயகத்தையும் நாட்டின் பெருமையையும் காப்பாறற்ப் பேசுகிறார்கள். நாட்டில் சட்டத்தின் ஆட்சி இல்லை. பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரி போல நாட்டை நடத்துகிறார்.

மல்லிகார்ஜூன் கார்கே

ஏஜென்சிகளை (சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்றவை) தவறாக பயன்படுத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகளை அவர்கள் அடக்குகிறார்கள். பிரதமர் மோடி வெளிநாடுகளில் இந்தியாவை பலமுறை கேலி செய்தார். இந்தியாவுக்கு எதிராக அனைத்து விதமான விஷயங்களையும் பிரதமரால் சொல்ல முடியும் என்றால், ராகுல் காந்தி அப்படி செய்தால் அது ஏன் குற்றம்?.

கவுதம் அதானி

அதானி விவகாரத்தில் ஜே.பி.சி. விசாரணையை நாங்கள் கோருகிறோம். இதிலிருந்து கவனத்தை திசைதிருப்ப அரசு முயற்சிக்கிறது. நாங்கள் (எதிர்க்கட்சிகள்) ஒன்றாக இருக்கிறோம், அதானி விவகாரத்தில் ஜே.பி.சி. விசாரணைக்கு தொடர்ந்து கோரிக்கை வைப்போம். மாநிலங்களவையில் எனக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது. ஏனெனில் அவைத் தலைவர் 10 நிமிடங்கள் பேச அனுமதி தந்தார்,மேலும் நான் எழுந்ததும் இரண்டு நிமிடங்களுக்கு பிறகு சபை ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.