பாஜக சமூக நீதிக்கு எதிரான கட்சி - மல்லிகார்ஜுன கார்கே கடும் விமர்சனம்

 
Mallikarjuna Kharge

பிரதமர் மோடி எப்போதும் டாக்டர் அம்பேத்கரை பற்றி பேசுவார், ஆனால் அவரது கொள்கைகளை பின்பற்றுவதில்லை என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். 

அரசியலமைப்பு சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.பி. ஒருவர் கருத்து தெரிவித்து இருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காணொலி காட்சி வாயிலாக அவர் ஆற்றிய உரையில், நாட்டிற்கு சுதந்திரம் அளித்ததிலும், அரசியல் சாசனத்தை உருவாக்குவதிலும் ஆர்எஸ்எஸ்-பாஜகவின் பங்களிப்பு இல்லை. 

மேலும் மூவர்ணக் கொடிக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  பிரதமர் மோடி எப்போதும் டாக்டர் அம்பேத்கரை பற்றி பேசுவார், ஆனால் அவரது கொள்கைகளை பின்பற்றுவதில்லை. பின்பற்றியிருந்தால் அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று பேசியவர்களை கட்சியில் இருந்து நீக்கியிருப்பார்.  பாஜக சமூக நீதிக்கு எதிரானது.  அனைவருக்கும் உரிமையும் சுதந்திரமும் வழங்கிய அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று இன்று பாஜக பேசுகிறது என கூறியுள்ளார்.