இந்திரா காந்தியின் பிறந்த நாளில் அவருக்கு எங்கள் பணிவான அஞ்சலி - மல்லிகார்ஜுன கார்கே

 
Mallikarjuna Kharge

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவருக்கு புகழாரம் தெரிவித்துள்ளார். 

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 106வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாளை காங்கிரஸ் தொண்டர்கள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதேபோல் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலரும்  அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

congress

இந்த நிலையில், மல்லிகார்ஜுன கார்கே அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவின் முதல் பெண் பிரதமரும், நமது அடையாளமானவருமான இந்திரா காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு எங்கள் பணிவான அஞ்சலி. இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பேணிக்காப்பதிலும், நமது நாட்டை வலிமையானதாகவும், முற்போக்கானதாகவும் மாற்றுவதில், அவர் இந்தியாவிற்கான திறமையான தலைமையையும், உண்மையான விசுவாசத்தையும், வலுவான மன உறுதியையும் தொடர்ந்து வெளிப்படுத்தி, நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்தார். அவரது வாழ்க்கை, நாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பு கடமை மற்றும் அடங்காத தைரியம் ஆகியவை கோடிக் கணக்கான இந்தியர்களுக்கு எப்போதும் ஊக்கமளிக்கும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.