ஜனநாயக நாட்டில் எதற்கு செங்கோல்?- மஹுவா மொய்த்ரா

ஜனநாயக நாட்டின் நாடாளுமன்றத்தில் செங்கோலுக்கு இடமில்லை என திரிணமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா கூறினார்.
மக்களவையில் பேசிய திரிணமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, “இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி செங்கோலுடன் வரவேற்கப்பட்டார். செங்கோல் என்பது மன்னராட்சியின் அடையாளம். ஜனநாயக நாட்டின் நாடாளுமன்றத்தில் செங்கோலுக்கு இடமில்லை. பாஜக மைனாரிட்டி அரசு ஆகிவிட்டது என்பதை அக்கட்சியினர் இன்னும் உணரவில்லை. Musalmaan, Madarassa, Mangalsutra, Mutton என ஆங்கில எழுத்து M-ல் தொடங்கும் பல வார்த்தைகளை தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி பயன்படுத்தினார். ஆனால் Manipur என்ற வார்த்தையை ஒரு முறைகூட பயன்படுத்வில்லை.
நான் என்னுடைய பதவியை இழந்துவிட்டேன், வீட்டை இழந்துவிட்டேன். ஒரு அறுவை சிகிச்சையின்போது எனது கர்ப்பப்பையை இழந்துவிட்டேன்.
— Black Panther (@Ranjith_Rayappa) July 1, 2024
நான் எதைப் பெற்றேன் என தெரியுமா?
ராகுல் சொன்னது போல பயத்தில் இருந்து விடுதலை பெற்றேன். உங்களை பார்த்து நான் பயப்படமாட்டேன்!
எம்.பி மஹூவா மொய்த்ரா 🔥🔥 pic.twitter.com/GEaWdiTG0W
17-வது மக்களவையில் 78 பெண்கள் இருந்தனர். அது 14.3% மட்டுமே.18- வது மக்களவையில் 74 பெண்கள் மட்டுமே இருக்கின்றனர். பாஜகவில் 240 எம்பிக்களில் 30 பெண் எம்பிக்கள் மட்டுமே இருக்கின்றனர். இது வெறும் 12.5% தான். ஆனால் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்., கட்சியில் 2019 ஆம் ஆண்டு 37% பெண்கள் அவையில் இடம் பெற்றிருந்தனர். 2024 ஆம் ஆண்டில் இது 38%- ஆக உயர்ந்துள்ளது. என்னை வெளியேற்றியதற்கு 63 எம்பிக்களை பாஜக விலையாக கொடுத்திருக்கிறது. கடந்த முறை என்னை பேச விடாமல் ஒடுக்குனீர்கள்.! ஒரு எம்பியின் குரலை நசுக்கியதற்கு பொதுமக்கள் உங்களுடைய 63 எம்பிக்களை நிரந்தரமாக கூப்பில் உட்கார வைத்தனர். நான் என்னுடைய பதவியை இழந்துவிட்டேன், வீட்டை இழந்துவிட்டேன். ஒரு அறுவை சிகிச்சையின்போது எனது கர்ப்பப்பையை இழந்துவிட்டேன். நான் எதைப் பெற்றேன் என தெரியுமா? பயத்தில் இருந்து விடுதலை பெற்றேன். உங்களை பார்த்து நான் பயப்படமாட்டேன்!” என பேசினார்.