மேடையில் பேசிக்கொண்டிருந்த போதே மாரடைப்பு... 20 வயது மாணவி உயிரிழப்பு

 
ச்

மகாராஷ்ட்ரா மாநிலம் தராஷிவில், பேசிக்கொண்டிருந்தபோதே 20 வயது மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video: Woman, 20, collapses and dies while giving farewell speech in college  - India Today

மகாராஷ்டிராவின் தாராஷிவ் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது 20 வயது கல்லூரி மாணவி வர்ஷா கரத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அந்தப் பெண் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

வர்ஷா கரத் தனது கல்லூரி நிகழ்வில் மராத்தியில் உரையாற்றிக்கொண்டிருந்தார். அவரது நகைச்சுவை பேச்சை கேட்டு, பார்வையாளர்களும் சிரித்துக் கொண்டிருந்தனர். திடீரென பேச்சை நிறுத்திய வர்ஷா கரத், தரையில் சரிந்து விழுந்தார். அங்கிருந்த பேராசியர்களும், சக மாணவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். அம்மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.