மற்றொரு லாக்டவுன் மூலம் அனைத்தையும் மூட விரும்பவில்லை... மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே

 
லாக்டவுன்

மகாராஷ்டிராவில் மற்றொரு லாக்டவுன் மூலம் அனைத்தையும் மூட விரும்பவில்லை. கோவிட் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஏஜென்சிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதாவது: மற்றொரு லாக்டவுன் மூலம் அனைத்தையும் மூட விரும்பவில்லை. சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் மட்டுமே இதுபோன்ற சவால்களை சமாளிக்க உதவாது. ஒவ்வொரு குடிமகனும், சமூகத்தில் அவர்களின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், ஒரு அபாயகரமான கொரோனா வைரஸின் இறுதி அடியை நாம் சமாளிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த சுகாதாரத் துறை விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 

உத்தவ் தாக்கரே
வாழ்க்கையும், வாழ்வாதாரத்தையும் நிறுத்த முயற்சிப்பதற்கு பதிலாக பிரேக் தி செயின் மற்றும் மிஷன் பிகின் அகைன் போன்ற கட்டுப்பாடுகள் மூலம் வைரஸை அகற்றுவது கட்டாயமாகும். விதிமுறைகளை மீறுபவதை இனி பொறுத்துக்கொள்ள முடியாது. விதிகளை கவனமாக பின்பற்ற வேண்டும். மீறுபவர்கள் மீது, அனைத்து ஏஜென்சிகளுக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நினைவில் கொள்ளுங்கள், இது உங்கள் சொந்த நலனுக்காக, எனவே நாம் அனைவரும் கூடிய விரைவில் இதிலிருந்து வெளியே வரலாம். 

கோவிட் கட்டுப்பாடுகள்

சுகாதார அமைப்பு ஏற்கனவே சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும் தடுப்பூசி போடப்படாத அல்லது அறிகுறியற்ற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் ஆக்ஸிஜன் தேவையும் அதிகரிக்கும். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற முன்னணி மருத்துவ ஊழியர்களுமம் பல இடங்களில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை. தடுப்பூசி போடப்படாதவர்கள் அனைவரும் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி விகிதம் குறைவாக இருக்கும் பகுதிகளில் மாநில அரசு கட்டுப்பாடுகளை கடுமையாக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.