பால்கனியில் இருந்து எச்சில் துப்பிய முதியவர் உயிரிழப்பு!
மத்தியப் பிரதேசத்தின் கஞ்ச் பசோடா நகரில், வீட்டின் பால்கனியிலிருந்து குட்கா மென்று கீழே எச்சில் துப்பியபோது, அருகில் இருந்த 11,000 வோல்ட் உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் பட்டு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பலியானார்.
விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயதான கொத்தனார் பிரபுலால் குப்தா, அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று, அவர் தனது வீட்டின் மூன்றாவது மாடி பால்கனியில் நின்று குட்காவை மென்றவாறே துப்பினார். இருப்பினும், அந்த எச்சில் பால்கனிக்கு மிக அருகில் சென்றுகொண்டிருந்த 11 kV (11,000 வோல்ட்) உயர் அழுத்த மின்சாரக் கம்பியின் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து கடுமையான தீக்காயங்கள் காரணமாக பிரபுலால் குப்தா உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், அபாயகரமான வகையில் கட்டிடத்திற்கு மிக அருகில் செல்லும் உயர் அழுத்த மின்சாரக் கம்பிகளை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்கள் வீடுகளுக்கு மேலே செல்லும் அபாயகரமான மின் கம்பிகள் குறித்து பலமுறை புகார் அளித்தும், மின்சாரத் துறை தங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

