ஜோதிராதித்ய சிந்தியாவின் காலில் விழுந்து வணங்கிய மத்திய பிரதேச பா.ஜ.க. அமைச்சர்..

 
ஜோதிராதித்ய சிந்தியாவின் காலில் விழுந்து வணங்கிய பிரதுமான் சிங் தோமர்

மத்திய பிரதேசத்தில் அம்மாநில பா.ஜ.க. அமைச்சர் பிரதுமான் சிங் தோமர், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் காலில் விழுந்து வணங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மாதராவ் சிந்தியாவின் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய பிரதேசம் குவாலியரில் மராத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மராத்தான் போட்டி நிகழ்ச்சியில் மாதராவ் சிந்தியாவின் மகனும், மத்திய அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியா, பிரபல நடிகை மகிமா சவுத்திர உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா மேடையில் மத்திய பிரதேச  பா.ஜ.க. அமைச்சர் பிரதுமான் சிங் தோமர் ஜோதிராதித்ய சிந்தியா காலில் விழுந்து வணங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதுமான் சிங் தோமர்

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், விழா மேடையில் ஜோதிராதித்ய சிந்தியாவின் பின்னால் இருந்த மத்திய அமைச்சர் பிரதுமான் சிங் தோமர் சிந்தியாவை அழைத்து, அவர் திரும்பியவுடன் அவர்  காலில் விழுந்து வணங்கினார். சிந்தியா தடுத்தும் பிரதுமான் சிங் தோமர் தனது விசுவாதத்தை காட்டும் வகையில் தனது தலையால் அவரது பாதத்தை வணங்கியது தெளிவாக தெரிகிறது. 

ஜோதிராதித்ய சிந்தியா
மத்திய பிரதேசத்தில் குவாலியர் அரச குடும்பத்தினருக்கு தனி செல்வாக்கு எப்போதும் உள்ளது. குவாலியர் அரசு குடும்பத்தை சேர்ந்தவர் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மாதராவ் சிந்தியா. இவரது மகன் தான் தற்போதைய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜோதிராதித்ய சிந்தியா. ஜோதிராதித்ய சிந்தியா தனது அரசியல் பயணத்தை முதலில் காங்கிரஸில் இருந்துதான் தொடங்கினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் அந்த கட்சியிலிருந்து வெளியேறி பா.ஜ.க.வில் இணைந்தார்.