காங்கிரஸ் பகவான் அனுமனை அரசியலாக்குகிறது... மத்திய பிரதேச அமைச்சர் குற்றச்சாட்டு

 
காங்கிரஸ் எப்போதுமே தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை.. அவர்களால் அரசியல் மட்டுமே செய்ய முடியும்.. நரோட்டம் மிஸ்ரா

காங்கிரஸ் பகவான் அனுமனை அரசியலாக்குகிறது என்று மத்திய பிரதேச அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான நரோட்டம் மிஸ்ரா குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான திக்விஜய சிங் கடந்த சில தினங்களுக்கு முன், நாங்கள் சனாதன தர்மத்தை சேர்ந்தவர்கள், நாங்கள் இந்துத்துவாவை ஒரு மதமாக கருதவில்லை. சனாதன தர்மத்தில் மதம் வெல்லட்டும்,  அநீதி அழிக்கப்படட்டும், உயிரினங்களிடையே நல்லுறவு இருக்க வேண்டும் மற்றும் உலக நலனும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன.  எங்கள் பேச்சை கேட்காதவர்களை தடியால் அடித்து வீட்டை உடைக்க வேண்டும் என்று இந்து மதத்தில் கூறப்படவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

2014ம் ஆண்டு முதல் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு எதிரானது.. திக்விஜய சிங்

திக்விஜய சிங்கின் கருத்து குறித்து மத்திய பிரதேச அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான நரோட்டம் மிஸ்ரா கூறியாவது: நீங்கள் (திக்விஜய சிங்) முகலாய கலாச்சாரத்தின் வக்கீல் மற்றும் உங்கள் சீடர்கள் சில சமயங்களில் சனாதன தர்மத்தின் மீது கேள்விகளை எழுப்புகிறார்கள், சில சமயங்களில் காவி குறித்து கேள்விகளை எழுப்புகிறார்கள், காவி பயங்கரவாதம் என்று சொல்கிறார்கள். சில சமயங்களில் இந்துக்கள் மீது கேள்விகளை எழுப்புகிறார்கள்.

ராபர்ட் வதேரா

ஆனால் ஜே.எம்.பி. (ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ்) மற்றும் பிடிபட்ட தீவிரவாதிகள் மீது ஏன் எந்த கேள்வியும் எழுப்பவில்லை?.  காங்கிரஸ் பகவான் அனுமனை அரசியலாக்குகிறது. காந்தி குடும்பத்தின் மருமகன் ராபர்ட் வதேரா, பஜ்ரங்பாலி மற்றும் அனுமன் இருவரும் வேறு வேறு என்று கூறி வந்தார். இப்போது கர்நாடக தேர்தல் முடிவுகளுக்காக மக்களுக்கு நன்றி சொல்ல போகிறார். வத்ரா ஒரு ராகுல் காந்தியா? இவ்வாறு அவர் தெரிவித்தார்.