அடுக்குமாடி குடியிருப்பு திடீர் தீ விபத்து - 7 பேர் உடல் கருகி பலி!!

 
rtn

மத்திய பிரதேசத்தில் இரண்டு அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

tn

மத்திய பிரதேசம் இந்தூரில் இரண்டு அடுக்கு மாடி குடியிருப்பில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.  தீ கட்டடம் முழுவதும் மளமளவென பரவிய நிலையில், தீயில் கருகி 7 பேர் உயிரிழந்தனர். காயங்களுடன் 9 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தை அறிந்து அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

tn

இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில்,  முதற்கட்ட விசாரணையில் மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.  அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மக்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இரவில் இருந்ததால் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் பதற்றத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.