திருட போன இடத்தில் ‘லுங்கி டான்ஸு.. லுங்கி டான்ஸு..’- 4 மணிநேரம் டைம் பாஸ்

 
s

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பைக் ஷோருமுக்கு திருடச் சென்ற திருடன் ‘லுங்கி டான்ஸு.. லுங்கி டான்ஸு..’ ஆடிய வீடியோ வைரலாகிவருகிறது.

Lungi Dance', Bath, Coffee: Thief Chills In Showroom For Hours, Steals Rs  5-Lakh Bike

உத்தரபிரதேசத்தில் பைக் ஷோருமுக்கு திருடச் சென்ற திருடன், ‘லுங்கி டான்ஸ்’ பாடலுக்கு நடனமாடிய சிசிடிவி காணொளி வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த வீடியோவில், அந்த நபர் விற்பனையகத்திற்குள் பிரபலமான பாலிவுட் பாடலான "லுங்கி டான்ஸ்" பாடலுக்கு நடனமாடுவது பதிவாகியுள்ளது. மேலும் சுமார் 4 மணி நேரம் ஷோரூமில் டைம் பாஸ் செய்த திருடன், நிதானமாக காபி குடித்துவிட்டு, குளித்து துணி துவைத்துவிட்டு, தனது ஆடைகளை உலர்த்தி, அந்தப் பாடலுக்கு நடனமாடியுள்ளார். அதன் பிறகு, அவர் கடை மேலாளருக்குச் சொந்தமான ரூ.4.71 லட்சம் மதிப்புள்ள பிரீமியம் KTM அட்வென்ச்சர் 390 S பைக்கை திருடிச் சென்றுள்ளார். 


இந்தச் சம்பவம் வாரணாசியின் மண்டுவாடி காவல் நிலையப் பகுதியில் நடந்துள்ளது.  இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.