இப்படிலாமா யோசிப்பாங்க! டேபிள் ஃபேன்கள் வைத்து சாலையை உலர்த்தும் வடக்கன்ஸ்
உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழையால் லக்னோ-கான்பூர் விரைவுச்சாலை திறக்கப்பட்ட வெறும் 2 வாரங்களில் கடும் சேதமடைந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ-கான்பூர் விரைவுச்சாலையில் அண்மையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. ஈரப்பதம் மற்றும் மழைநீர் காரணமாக சீரமைப்புப் பணிகள் தாமதமாவதைத் தடுப்பதற்காக, சாலை மேற்பரப்பை உலர்த்தி சீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்த ஒப்பந்ததாரர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால் சாலையை அவசர அவசரமாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள், ஆங்காங்கே டேபிள் ஃபேன்-கள் வைத்து சாலையை உலர்த்தும் காணொலி இணையத்தில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.
लखनऊ–कानपुर एक्सप्रेस वे पर पेच वर्क के पास भरे बरसाती पानी को सुखाने के लिए 10 पंखे लगाए गए#LucknowKanpurExpressway pic.twitter.com/5OX3sKxQ3w
— NDTV India (@ndtvindia) August 6, 2026
சுமார் 4,200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட லக்னோ-கான்பூர் கிரீன்ஃபீல்ட் தேசிய உயர்மட்ட விரைவுச்சாலையை, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் ஜூலை 13 அன்று திறந்து வைத்தனர். விரைவுச்சாலை திறக்கப்பட்ட 22 நாட்களில், சாலை உட்புறமாக சரிந்தது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கட்டுமான நிறுவனத்தின் மீது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. சாலை தாழ்ந்ததற்கான காரணத்தைக் கண்டறியவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும், கட்டுமானத்தின் தரம் மற்றும் திட்டச் செயலாக்கம் குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதனிடையே சாலையை அவசர அவசரமாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள், ஆங்காங்கே டேபிள் ஃபேன்-கள் வைத்து சாலையை உலர்த்தும் காணொலி இணையத்தில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.

