அரவிந்த் கெஜ்ரிவால் மீது என்.ஐ.ஏ விசாரணைக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் பரிந்துரை

 
டெல்லியில் பேருந்துகளில் பெண்களுக்கு  இலவச பயணம்….. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

நாளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது NIA விசாரணைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் சக்ஸேனா பரிந்துரைத்துள்ளார்.

Image


ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை மதுபான முறைகேடு செய்ததாக கூறி அவரை கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியை அழிக்க பாஜக முயற்சி செய்வதாக கூறி ஆம் ஆத்மி கட்சியினர் இந்தியா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஊழலை ஒழிக்க வந்த ஆம் ஆத்மி மீது ஊழல் வழக்கு போடவே அமலாக்கத் துறையை அனுப்பி பாஜக அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்திருப்பதாகவும், நல்ல நோக்கத்திற்காக அமலாக்கத்துறை இந்தியாவில்  ஆரம்பிக்கபட்டது. ஆனால் இன்று அரசியலுகாக செயல்படுகிறது என்றும் அக்கட்சியினர் பாஜகவை சாடிவருகின்றனர்.

இதனிடையே 'சீக்கியர்களுக்கான நீதி' என்ற தடை செய்யப்பட்ட அமைப்பிடம் இருந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  நிதி பெற்றதாக உள்துறை அமைச்சகத்திற்கு உலக இந்து கூட்டமைப்பின் அஷூ மோங்கியா என்பவர் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது NIA விசாரணைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் சக்ஸேனா பரிந்துரைத்துள்ளார். நாளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில், ஆளுநரின் இந்த பரிந்துரை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முதலமைச்சருக்கு எதிராக என்.ஐ.ஏ விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

உச்ச நீதிமன்றம் அமலாக்க துறையை தேர்தலை முன்னிட்டு ஏன் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கேள்வி எழுப்பி விளக்கம் அளிக்க கேட்டிருந்த நிலையில் நாளை உச்ச நீதிமன்றம் டெல்லி முதல்வருக்கு ஜாமின் வழங்க நிச்சயம் வாய்ப்புள்ளது. இந்த நிலையில் டெல்லி துணைநிலை ஆளுநர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது NIA விசாரிக்க வேண்டும் என இன்று கடைசி நேரத்தில் ஒரு அதிரடியை மத்திய அமைச்சர் அமித் ஷாவின் ஆலோசனைப்படி கிளப்பி உள்ளார். இந்தியா கூட்டணியின் வெற்றி ஏற்கனவே தலைநகரில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா கூட்டணிக்காக வேறு எங்கும் பிரச்சாரம் செய்ய செல்லக்கூடாது என்பதற்காக பாஜகவினர் புதிது புதிதாக காரணம் தேடி வழக்குப் பதிய பார்ப்பதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.