“ஆந்திர ரகசிய தரவுகளும் கசிவு..”- ஆந்திர அமைச்சர் கிண்டல்
ஆந்திர அரசு முதலீடுகளின் ரகசிய தரவுகளும் கசிந்துள்ளது என ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் கிண்டலாக கூறியுள்ளார்.

2026 ஜூன் மாத இறுதியில் Guidance Tamil Nadu அமைப்பில் பணியாற்றிய இரண்டு முக்கிய ஊழியர்கள் பணியிலிருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. அவர்களில் முக்கியமானவர்கள் கிறிஸ்டோ லாரல் (Christo Laurel), பிரபாகரன் (Prabakaran). இவர்கள் இருவரும் பின்னர் ஆந்திரப் பிரதேச அரசின் Andhra Pradesh Economic Development Board (APEDB) அமைப்பில் பணியில் சேர்ந்ததாகத் தகவல்கள் வெளியாகின. அதன்பிறகு ஜூலை மாதத்தில் மேலும் 13 ஊழியர்கள் ராஜினாமா செய்ததாக முன்னாள் ஊழியர்களை மேற்கோள் காட்டி The News Minute செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் மொத்தம் 15 பேர் வெளியேறிய விவகாரம் சர்ச்சையானது. 15 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் என்று கூறுவது சரியானதல்ல. கிடைத்துள்ள விசாரணைச் செய்தியின்படி, இரண்டு பேர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர். மற்ற 13 பேர் தாங்களாகவே ராஜினாமா செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் ஆந்திரப் பிரதேச அரசு தனது மாநிலத்துக்கு அதிக தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக APEDB என்ற அமைப்பு செயல்படுகிறது. Guidance Tamil Nadu அமைப்பில் பணியாற்றிய சில அனுபவமுள்ள ஊழியர்கள் ஆந்திரப் பிரதேச அமைப்பில் இணைந்திருப்பது இந்தச் சர்ச்சையை அதிகரித்துள்ளது. 2026 நவம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற CII Partnership Summit-ல் ஆந்திரப் பிரதேசம் சுமார் ரூ.10 லட்சம் கோடி முதலீட்டு முன்மொழிவுகளைப் பெற்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
— Lokesh Nara (@naralokesh) November 20, 2026
இந்நிலையில் ஆந்திர அரசு முதலீடுகளின் ரகசிய தரவுகளும் கசிந்துள்ளது, முதலீட்டாளர்களுக்கு ஒரேநாளில் பதிலளிப்பதே எங்கள் ரகசிய வியூகம். எங்கள் முதலீடு வியூகத்தை காப்பி அடித்துக் கொள்ளலாம் தமிழ்நாடு அரசின் முதலீட்டு ரகசியங்கள் ஆந்திராவுக்குக் கசிந்ததாகக் கூறப்படும் நிலையில், ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் கிண்டலாக கூறியுள்ளார்.

