சிந்தியா விவகாரம்.. கட்சியில் தலைவரின் கவுரவம் மிக உயர்ந்தது, காங்கிரஸால் இதை புரிந்து கொள்ள முடியாது.. பா.ஜ.க. பதிலடி

 
புலி இன்னும் உயிருடன் இருக்கிறது….. காங்கிரஸ் தலைவர்களுக்கு ஜோதிராதித்ய சிந்தியா எச்சரிக்கை

சிந்தியாவை விமர்சனம் செய்த காங்கிரஸ் கட்சிக்கு, பா.ஜ.க.வில் கட்சியின் தலைவரின் கவுரவம் மிக உயர்ந்தது, காங்கிரஸால் இதை புரிந்து கொள்ள முடியாது என்று பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.

மத்திய பிரதேசம் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள மாதவ் தேசிய பூங்காவுக்கு புலிகள் கொண்டு வரப்பட்டதை குறிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா  மற்றும் அம்மாநில பா.ஜ.க. தலைவர் சர்மா உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் அறிவிப்பாளர் அம்மாநில பா.ஜ.க. தலைவர் சர்மாவின் பெயரை குறிப்பிட்டு பேச அழைத்தார். உடனே சர்மாவும் பேசுவதற்காக மைக் இருந்த பகுதிக்கு சென்றார். 

சர்மா, ஜோதிராதித்ய சிந்தியா

அப்போது மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அவர் பின்னால் வேகமாக சென்று ஏதோ கூறினார். உடனே சர்மா புன்னகையுடன் தனது இருக்கைக்கு திரும்பினார். அதேசமயம் ஜோதிராதித்ய சிந்தியா மைக்கில் உடனே பேச தொடங்கினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி மிகவும் வைரலானது. இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, மற்ற தலைவர்களை ஒரங்கட்டுவது அவரது குடும்ப பாரம்பரியம் என்று கூறி ஜோதிராதித்ய சிந்தியாவை காங்கிரஸ் கடுமையாக சாடியது. 

காங்கிரஸ்

காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. பா.ஜ.க.வின் மாநில ஊடக பொறுப்பாளர் லோகேந்திர பராஷர் கூறியதாவது: ஒரு நிகழ்ச்சியின் முடிவில் மாநில கட்சி தலைவர் உரையாற்றுவது மரபு. பா.ஜ.க.வில் தலைவரின் கவுரவம் மிக உயர்ந்தது. காங்கிரஸால் இதை புரிந்து கொள்ள முடியாது. தலைவர் மிகவும் மரியாதைக்குரியவர், எனவே அவரது பேச்சு இறுதியில் சரியாக வருகிறது என தெரிவித்தார்.