மக்களவைத் தேர்தல்: இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

 
election

பதினெட்டாவது மக்களவைத் தேர்தலின் கடைசிக்கட்டமாக 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

election commision

மக்களவைத் தேர்தல் ஏழாம்  கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று  இறுதி கட்ட கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.  ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது . பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 13 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 13, மேற்குவங்கத்தில் 9, பிகாரில் 8, ஒடிசாவில் 6, இமாச்சலப்பிரதேசத்தில் 4, ஜார்க்கண்டில் 3 தொகுதிகளில் இன்று  வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

vote

சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியிலும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.  பிரதமர் நரேந்திர மோடி 3 ஆவது முறையாக போட்டியிடும் வாரணாசி தொகுதியில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது.