ஆட்சியை பிடிப்பது யார்? - காலை 8 மணி முதல் எண்ணப்படும் வாக்குகள்

 
election commision

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன.  முதல் அரை மணி நேரம் தபால் வாக்குகளும், அதன்பின் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும்.

vote

வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 39 வாக்கு எண்ணும் மையங்களிலும் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 14 மேஜைகள் வீதம் அமைக்கப்பட்டுள்ளன.

vote counting

ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணும் பணியை தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் போட்டியிட்ட 8,360 வேட்பாளர்கள் முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். தேர்தலில் போட்டியிட்டவர்களில் 47% பேர் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்த தேர்தலில் 94 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில், 64.20 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.