மக்களவைத் தேர்தல் - 96 கோடி வாக்காளர்கள்

 
election

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு , வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவற்றை வெளியிட்டு வருகிறது.  இந்த சூழலில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பணிகளுக்காக புதிய தேர்தல் ஆணையர்களாக சுக்வீர் சிங் சந்து, ஞானேஷ் குமார் ஆகியோர் நேற்று நியமனம் செய்யப்பட்டனர். இந்த சூழலில்  மக்களவைத் தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். மக்களவைத் தேர்தல் தேதியுடன் ஆந்திரா, சிக்கிம், ஒடிசா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. 

election commision

இந்நிலையில்  வருகின்ற மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ளோரின் எண்ணிக்கை 96 கோடியாக உள்ளது; நாட்டின் 140 கோடி மக்கள் தொகையில் 96 கோடி பேர் வாக்களிக்க தகுதியுள்ளவர்களாக உள்ளனர்.  

election

மக்களவைத் தேர்தலை நடத்த இம்முறை 12 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 96 கோடி வாக்காளர்களில் 49 கோடி ஆண்கள், 46 கோடி| பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.