குஜராத்தில் அமித்ஷா அமோக வெற்றி

 
amitshah

காங்கிரஸ் சார்பில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரை 7,44,716 வாக்குகள் வித்தியாசத்தில் அமித்ஷா வீழ்த்தினார்.

Image

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. கடந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருந்த நிலையில் இந்த முறை கூட்டணி அல்லாமல் ஆட்சி அமைக்க முடியாத நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. இதுவரை வெளியான முடிவுகளின்படி பாஜக 294 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 231 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பிற கட்சிகள் 18 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 10,10,972 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் சார்பில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சோனல் ராமன் பாய் பட்டேலை 7,44,716 வாக்குகள் வித்தியாசத்தில் அமித்ஷா வீழ்த்தினார்.