மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு

 
tn

மக்களவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நாளை அறிவிக்கிறது.

election commision

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு , வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவற்றை வெளியிட்டு வருகிறது.  இந்த சூழலில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பணிகளுக்காக புதிய தேர்தல் ஆணையர்களாக சுக்வீர் சிங் சந்து, ஞானேஷ் குமார் ஆகியோர் நேற்று நியமனம் செய்யப்பட்டனர்.

election

இந்நிலையில் மக்களவை தேர்தல் தேதியை நாளை பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. மக்களவை தேர்தலை எத்தனை கட்டங்களாக நடைபெறும் என்று இன்று தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.