மக்களவைத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

 
election commision

மக்களவைத் தேர்தல் தேதியை இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். .

election

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு , வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவற்றை வெளியிட்டு வருகிறது.  இந்த சூழலில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பணிகளுக்காக புதிய தேர்தல் ஆணையர்களாக சுக்வீர் சிங் சந்து, ஞானேஷ் குமார் ஆகியோர் நேற்று நியமனம் செய்யப்பட்டனர்.

election

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். மக்களவைத் தேர்தல் தேதியுடன் ஆந்திரா, சிக்கிம், ஒடிசா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், புதிய தேர்தல் ஆணையர்கள் கூட்டாக தேதியை அறிவிக்கின்றனர்; இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்துவிடும்.