பாரத ரத்னா விருதை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன் - எல்.கே.அத்வானி

 
advani

தனக்கு வழங்கப்படவுள்ள பாரத ரத்னா விருதை பணிவுடனும், நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன் என எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி நிறுவன தலைவர்களில் ஒருவர் லால் கிருஷ்ண அத்வானி. எல்கே அத்வானி  இந்திரா காந்தி அமுல்படுத்திய அவரசநிலைப் பிரகடனத்தின் பின்னான தேர்தலில் அத்வானி வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக பதவியேற்றார். 1980 டிசம்பரில் பாரதீய ஜனதாக் கட்சியை அடல் பிகாரி வாஜ்பாயுடன் சேர்ந்து உருவாக்கினார். பாஜக உருவாக்கப்பட்ட பின்னர் 1982 களிலிருந்து இரண்டு முறை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார். 2002 முதல் 2004 வரை இந்தியாவின் 7வது துணைப் பிரதமராகப் பணி ஆற்றியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு  எல்.கே. அத்வானிக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி. அத்துடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு எல்.கே அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அத்வானி பிறந்தநாள் : பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் வாழ்த்து..

இந்த நிலையில், தனக்கு வழங்கப்படவுள்ள பாரத ரத்னா விருதை பணிவுடனும், நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன் என அத்வானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: பாரத ரத்னா விருது ஒரு நபராக தனக்கு கிடைத்த மரியாதை மட்டுமல்ல. எனது இலட்சியங்களுக்கும் கொள்கைகளுக்கும் கிடைத்த மரியாதை. தனக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள இந்நாளில், தன்னுடன் பணியாற்றிய பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் இருவரையும் நினைவு கூறுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.