வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக புகார்

 
கரப்பான்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக புகார் எழுந்துள்ளது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பரிமாறப்பட்ட உணவில் கரப்பான் பூச்சியின் புகைப்படம்.

ஷீரடியில் இருந்து மும்பை சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ரயிலில் பயணித்த ஒருவர் புகார் அளித்தார். இதனை ஐஆர்சிடிசி மேலாளர்கள் ஒப்புக்கொண்ட நிலையில், அதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.


இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர் கூறுகையில், “எங்கள் குடும்பத்தினர் அனைவரும் இந்த உணவை சாப்பிட்டு விட்டனர். 80 வயது தாத்தாவும் இந்த அசுத்தமான உணவை சாப்பிட்டுள்ளார். பருப்பில் கரப்பான் பூச்சி உயிருடன் இருந்தது. மேலும் உணவில் இறந்த கரப்பான் பூச்சி இருந்தது. உணவுக்கு வழங்கப்பட்ட தயிர் புளிப்பாக இருந்தது” என்றார். இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த பிறகு, ஐஆர்டிசி மன்னிப்பு கேட்டுள்ளது.