"மதுக்கடைகளுக்கு இரவு 10 மணி வரை அனுமதி" - புதுச்சேரியில் தளர்வுகள் அறிவிப்பு!

 
மதுக்கடைகள் மதுக்கடைகள்

புதுச்சேரி மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு செயலர் அசோக் குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், "புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக, ஏற்கெனவே அக்டோபர் 15 ஆம் தேதி நள்ளிரவு வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோன தொற்று குறைந்து வருவதால், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, மேலும் அக்டோபர் 31 ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்படுகிறது. 

Special COVID-19 duty on liquor withdrawn in Puducherry | The News Minute

அதன்படி தினமும் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். இதே போல் தினசரி, சமுதாயப் பொது நிகழ்ச்சிகள் மற்றும் பொழுது போக்கு தொடர்பான நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது. கடைகள், வணிக நிறுவன ஊழியர்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும். கடற்கரை சாலை, பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் அனைத்தும், அனைத்து நாட்களும் வழக்கமான நேரங்களில் முழுமையாகத் திறந்திருக்கலாம். அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இரவு 10 மணி வரை திறந்திருக்கலாம். திருமண விழாக்களில் அதிகபட்சம் 100 பேரும், துக்க நிகழ்வுகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம். 

Further relaxation of curfew in Pondicherry? - The announcement will be  released today || புதுச்சேரியில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள்? - இன்று  அறிவிப்பு வெளியாகும்

அனைத்து விதக் கடைகள், வணிக நிறுவனங்கள், காய்கறி மற்றும் பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கலாம். அனைத்து வித உணவகங்கள், தங்கும் விடுதிகள், மது கூடங்களுடன் கூடிய விடுதிகள், தேநீர் கடைகள், பழச்சாறு நிலையங்கள் குளிர்சாதன வசதியின்றி இரவு 11 மணி வரை இயங்கலாம். மதுக்கடைகள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கலாம். படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் கொரோன விதி முறைகளை பின்பற்றி முழுமையாக இயங்கலாம். திரையரங்கங்கள், வணிக வளாகங்கள் கொரோனா விதிகளை பின் பற்றி நள்ளிரவு 12.30 மணி வரை இயங்கலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.