இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

 

இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் 63 நாட்களுக்கு பிறகு ஒரு லட்சத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக இந்தியாவில் படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

இந்நிலையில் இந்தியாவில் ஒரேநாளில் 86,498 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 63 நாட்களுக்கு பிறகு ஒருநாள் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் கீழ் குறைந்தது. நேற்று முன்தினம் 1.14 லட்சம், நேற்று 1 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று ஒரு லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,89,09,975லிருந்து 2,89,96,473 ஆக உயர்ந்துள்ளது. அதேபோ இந்தியாவில் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,03,702 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,71,59,180லிருந்து 2,73,41,462 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை விகிதம் 93.94%; உயிரிழப்பு விகிதம் 1.21% ஆக உள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 3,49,186லிருந்து 3,51,309 ஆக உயர்ந்துள்ளது.