திருப்பதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

 
tirupati

திருமலை திருப்பதியில் முதலாவது பாதையில் இருக்கும் யானை வளைவு அருகே சிறுத்தை புலியும் , ஸ்பெஷல் டைப் காட்டேஜ் பகுதியில் கரடி நடமாட்டமும் இருப்பது கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.  இதுத்தவிர   முள்ளம் பன்றி , காட்டுப்பன்றிகள் , புனுகு பூனைகள் ஆகியவை நடமாட்டம் இரவில் இருப்பது தானியங்கி முறையில் படம் பிடிக்கும் ட்ராப் கேமராக்களில் பதிவாகின.  இதனால் சிறுத்தைகளை பிடிக்க 6 கூண்டுகள் வைத்து வனத்துறை பிடித்தது. 

இந்நிலையில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் சாலையில் சிறுத்தை ஒன்று குறுக்கே ஓடிய காட்சி அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள டிராப் கேமராவிலும், சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.

tirupati road

திருப்பதியில் இருந்து திருமலைக்கு பயணிக்கும் பக்தர்கள், இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்லும் பக்தர்கள் எச்சரிக்கையுடன் பயணிக்க அறிவுறுத்தியுள்ளது.