பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் ஐசியூவில் அனுமதி... கொரொனா தொற்று என தகவல்!

 
லதா மங்கேஷ்கர்

இந்தியா முழுவதும் 3ஆம் அலை வேகமெடுத்து வருகிறது. முதல் இரண்டு அலைகளில் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது அதேபோல பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. நேற்று மட்டுமே மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜேபி நட்டா, பீகார் மற்றும் கர்நாடகா முதலமைச்சர்கள் என நான்கு அரசியல் புள்ளிகளுக்கு கொரோனா இருந்தது கண்டறியப்பட்டது.

79 साल पहले लता मंगेशकर ने पहली बार रेडिया पर गाया, कैसा था पिता जी का  रिएक्शन - Lata Mangeshkar revealed that how her father reacted when she  started singing 79 years

மேலும் நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், விஷ்ணு விஷால், சத்யராஜ், நடிகைகள் திரிஷா, மீனா, குஷ்பு, ஸ்வரா பாஸ்கர், இசையமைப்பாளர் தமன்,  வரிசையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தற்போது பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. இந்தத் தகவலை அவருடைய உறவினர் பெண் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்துள்ள அவர், "லதா மங்கேஷ்கர் நன்றாக இருக்கிறார். 

Lata Mangeshkar suffering from Covid pneumonia, admitted to ICU

அவரின் வயதைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை காரணங்களுக்காக மட்டுமே தற்போது ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அக்காவுக்காக உங்கள் பிரார்த்தனைகளை வேண்டுகிறோம்" என்றார். 2019ஆம் ஆண்டு நவம்பரில் மூச்சுத்திணறல் காரணமாக லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சையின் காரணமாக மீண்டுவந்தார். அதற்குப் பின் கொரோனா தொற்றால் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.