லட்டு விவகாரம்- சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை திடீரென நிறுத்தம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு கலப்பட விவகாரம் சிறப்பு விசாரணை குழு விசாரனை சுப்ரீம் கோர்ட் உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேசிய ஆந்திரா டிஜிபி துவாரகா திருமலை ராவ் , நெய் கலப்படம் குறித்து தேவஸ்தானம் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீவிரத்தை கொண்டு சிறப்பு விசாரணை குழு ஐஜி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் இந்த விசாரணைக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு வரும் வரை தற்காலிகமாக சிறப்பு விசாரணை குழுவில் அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக சிறப்பு விசாரணைக் குழு தேவஸ்தானம் சார்பில் டெண்டர் எவ்வாறு வழங்கப்படுகிறது. அதில் எவ்வாறு டெண்டர் முறைகள் கையாளப்படுகிறது. டெண்டர் பெற்ற நிறுவனம் வழங்கும் பொருட்களை எவ்வாறு சோதனை செய்யப்படுகிறது போன்றவற்றை துல்லியமாக ஆய்வு செய்துள்ளனர். போலீசார் சட்டப்படி மற்றும் நீதிமன்ற நிபந்தனைகளின் படி வெளிப்படையான விசாரணையை நடத்தி வருகிறோம். சுப்ரீம் கோர்ட் எவ்வாறு ஆணை வழங்குகிறார்களோ அதற்கு ஏற்ப எங்களது மேற்கண்ட நடவடிக்கை இருக்கும் என அவர் தெரிவித்தார்.