பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

 
advani

பாஜக மூத்த தலைவரும்,  முன்னாள் துணை பிரதமருமான எல்.கே அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ff

சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீடு திரும்பிய நிலையில் தற்போது மீண்டும் டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அத்வானியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

t

முன்னதாக அவருக்கு சிறுநீரகவியல் மருத்துவத்துறையை சேர்ந்த சிறப்பு மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. 96 வயதாகும் அத்வானிக்கு கடந்த மார்ச் 30ஆம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.