கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு- குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை அளித்து சியல்டா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல் துறையோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலர் சஞ்சய் ராய் (33) கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கைதான சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு அளித்த சியல்டா நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் சஞ்சய் ராய்ய்க்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு அல்ல என்றும் நீதிபதி கருத்து கூறினார்.