வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் 3 மாத குழந்தையை விற்ற தந்தை

 
baby

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் வாங்கிய கடனை திருப்பி முடியாததால் 3 மாத குழந்தையை விற்ற தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பங்காரப்பேட்டை: பெற்ற குழந்தையை திரும்ப கேட்ட தாய்! வழக்கு வியத்தகு திருப்பத்தை எடுத்தது

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள பங்காரப்பேட்டையை சேர்ந்தவர் முனிராஜ். மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர், தொழில் செய்வதாக கூறி பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். ரூ.40 ஆயிரம் கடனை கட்ட முடியாமல் திணறிய முனிராஜ் தனது குழந்தையை பக்கத்து வீட்டு பெண்ணுடன் சேர்ந்து 3 மாத குழந்தையை விற்பனை செய்துள்ளார்.


குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதி முறைப்படி பதிவு செய்து தத்தெடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முனி ராஜுக்கும், தத்தெடுத்த தம்பதிக்கும் இடையே நடந்த பணப்பரிவர்த்தனை குறித்து தகவல் இல்லை. இதுகுறித்து முனிராஜின் மனைவி பங்காரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.