ராகுல் காந்தி பப்பு என்று இந்தியர்களுக்கு தெரியும், வெளிநாட்டவர்களுக்கு தெரியாது.. கிரண் ரிஜிஜூ தாக்கு

 
ராகுல் காந்தி

ராகுல் காந்தி பப்பு என்று இந்தியர்களுக்கு தெரியும் ஆனால் அவர் உண்மையில் பப்பு என்பது வெளிநாட்டவர்களுக்கு தெரியாது என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ கிண்டல் செய்தார்.

காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகையில், பிரதமர் மோடி இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பை அழித்தார் என்று குற்றம் சாட்டியதோடு மத்திய பா.ஜ.க அரசையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு பா.ஜ.க.வின் இளம் தலைவரும், மத்திய சட்ட அமைச்ருமான கிரண் ரிஜிஜூ பதிலடி கொடுத்துள்ளார். 

மோடி

கிரண் ரிஜிஜூ டிவிட்டரில் ராகுல் காந்தியின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உரையின் வீடியோவை ஷேர் செய்து, சுயமாக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் இளவரசர் அனைத்து வரம்புகளையும் கடந்து விட்டார். இந்தியாவின் ஒற்றுமைக்கு இந்த மனிதர் (ராகுல் காந்தி) மிகவும் ஆபத்தானவனாகி விட்டார். இப்போது அவர் இந்தியாவை பிரிக்க மக்களை தூண்டுகிறார். இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் நேசிக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் ஒரே மந்திரம் ஒரு இந்தியா சிறந்த இந்தியா என பதிவு செய்து இருந்தார்.

கிரண் ரிஜிஜூ

மேலும் கிரண் ரிஜிஜூ தொடர்ச்சியான டிவிட்டுகளில், ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிர்வினையாற்ற வேண்டிய அவசியமில்லை. ஆனால் இந்திய எதிர்ப்பு படையினரால் இந்தியாவின்இமேஜை கெடுக்கும் வகையில் இந்திய எதிர்ப்பு அறிக்கைகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. ராகுல் காந்தி பப்பு என்று இந்திய மக்கள் அறிவார்கள், ஆனால் அவர் உண்மையில் பப்பு என்று வெளிநாட்டினருக்கு தெரியாது. ஒரே தயாரிப்பை மீண்டும் அறிமுகம் செய்வதற்கு  ஒரு வரம்பு இருக்க வேண்டும். லண்டனில் மீண்டும் தொடங்கப்பட்டது, மற்றும் சந்தைப்படுத்துதல் தீவிரமாக இந்தியாவில் அதே கும்பலால் பின்பற்றப்படுகிறது என தெரிவித்தார்.